பெண்கள் வயதாகும்போது பாலுறவில் ஆர்வம் இழப்பதற்கான காரணம்!

237

tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

பாலுறவு என்பது நமது உடல் மற்றும் உணர்வு சார்ந்த ஆரோக்கியத்தின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாகும். வயதாகும்போதும் நமது இணையருடன் நெருக்கமான பந்தத்துடன் வாழ வேண்டிய தேவை உள்ளது. அந்த நெருக்கத்தை மேம்படுத்தும் சிறப்பான கருவி உடலுறவு. ஆனால், பெண்களுக்கோ வயது அதிகரிப்பு என்பது ஆரோக்கியமான, நிறைவான பாலியல் வாழ்க்கைக்கான அச்சுறுத்தலாக உள்ளது.

ஆண்களுக்கு, பாலியல் விருப்பம் குறைவதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுக் கூறுவது எளிது. எடுத்துக்காட்டாக ஆண்களுக்கு விறைப்பின்மைப் பிரச்சனை இருக்கலாம். ஆண்களுக்கு பாலுறவில் ஆர்வம் குறைவதற்கு இது ஒரு பொதுவான காரணம். இதற்கு சிகிச்சையும் உள்ளது. ஆனால் பெண்களுக்கோ, இதற்கான காரணத்தைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. மனதளவிலான பிரச்சனையாக இருக்கலாம், உடல் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது ஏதேனும் நோய் காரணமாக இருக்கலாம், சிலருக்கு இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களும் இருக்கலாம்.

பெண்களுக்கு வயதாகும்போது, பாலியல் ஆர்வம் குறைவதற்கான சில காரணங்கள்:

நிரந்தர மாதவிடாய் நிறுத்தம் (Menopause)
பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைந்து விடும்போது, ​​இரவில் வியர்த்தல், ஹாட் ஃபிளாஷ் எனப்படும் திடீர் உடல் வெப்பம், பெண்ணுறுப்பு மெலிதல் வறண்டு போதல் போன்ற பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். இவை அனைத்தும் சேர்ந்து, பாலுறவு விருப்பம் குறைதல், வழவழப்புத் தன்மை குறைதல், உடலுறவின்போதும் உடலுறவுக்குப் பிறகும் கூட வலி ஏற்படுதல் போன்றவற்றுக்குக் காரணமாகலாம். மாதவிடாய் நிரந்தறாக நிற்கும் முன்பு கூட, ஹார்மோன்கள் குறைவதால் பெண்களின் பாலியல் விருப்பம் குறையக்கூடும்.

உளவியல் சிக்கல்கள் (Psychological issues)
சில பெண்களுக்கு, மன அழுத்தம், உடலைப் பற்றிய சுய அபிப்ராயம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் போன்ற காரணங்களால் பாலுறவில் விருப்பம் குறையலாம். வயது அதிகமான பெண்களுக்கு பணி ஒய்வு, பில்லைகளைவிட்டுப் பிரிந்திருப்பது, உடல்நலக் குறைகள், பிற மாற்றங்கள் என கூடுதலாக சில பிரச்சனைகளும் இருக்கலாம்.

உறவில் பிரச்சனைகள் (Relationship issues)
சில பெண்களுக்கு, வயது அதிகமாகும்போது தனது இணையருடன் இருந்த உணர்வுரீதியான நெருக்கம் குறையக்கூடும். ஒருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசாமல் இருப்பது, நெருக்கம் குறைவது, தீர்த்துக்கொள்ளாத மனக் கசப்புகள், வெறுப்புகள் போன்றவையும், பாலுறவில் விருப்பமில்லாமல் போகக் காரணமாகலாம். சில இணையர்கள், உடலுறவு என்பது பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே என்று கருதுகின்றனர். பிள்ளை பெற்றுவிட்டால் அதன் பிறகு உடலுறவுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

உடல்நலப் பிரச்சனைகள் (Medical conditions)
ஆரோக்கியக் குறைவும், பெண்களின் பாலியல் விருப்பத்தைக் குறைக்கலாம். இதயப் பிரச்சனைகள் பாலியல் உறுப்புகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கக்கூடும், இதனால் பாலியல் கிளர்ச்சி அடைவதும் உண்டாவதும் கடினமாகலாம். மன இறுக்கம், நீரிழிவுநோய், ஆர்த்ரைட்டிஸ், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் பாலியல் விருப்பத்தைக் குறைக்கலாம்.செயல்பட முடியாமல் போகச் செய்யும் உடல் குறைபாடுகள், அறுவை சிகிச்சைகள் போன்றவையும், பாலுறவில் ஈடுபடுவதையும், அதில் சந்தோஷத்தை அனுபவிப்பதையும் பாதிக்கலாம்.

மருந்துகள் (Medicines)
சில பெண்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளாலும் பாலியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். உயர் இரத்த அழுத்தம், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பாலியல் விருப்பத்தைக் குறைக்கலாம், புணர்ச்சிப் பரவசநிலை அடைவதையும் கடினமாக்கக்கூடும்.

இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பது எப்படி (Ways to overcome these challenges)
உங்களுக்குள்ள பிரச்சனையைப் புரிந்துகொள்ளுங்கள்: பிரச்சனையின் மூல காரணத்தை அறிந்துகொள்வது முதலில் முக்கியம்.உங்கள் பாலியல் ஆர்வம் குறைவுக்கு எது காரணமாக இருக்கலாம் என்று யோசியுங்கள். உங்கள் உடலைப் பற்றிய சுய அபிப்ராயத்தில் குறை உள்ளதா, மன அழுத்தமா, சுய மதிப்பீடு குறைவா, பாலியல் உறவில் சிறப்பாக ஈடுபட முடியவில்லையே என்ற மனக்கலக்கமா, வலிக்குமோ என்ற பயமா (முதல் முறையாக இருக்கலாம்) வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளா என்று கண்டறியுங்கள்.

சிகிச்சை: இதற்காக சிகிச்சையா என்று உங்களுக்கு சங்கடமாகத் தோன்றலாம். ஆனால் மருத்துவரிடம் பேசுவதும் ஆலோசனை பெறுவதும் மிகவும் உதவிகரமாக இருக்கக்கூடும்.மருத்துவரைச் சந்திக்கச் செல்லும் போது, இதற்கு முன்பு உங்களுக்கு இருந்திருக்கக்கூடிய பாலியல் பிரச்சனைகள் மற்றும் பிற பிரச்சனைகள் பற்றிய விவரங்களுடன் செல்லுங்கள். சிகிச்சை, வாழக்கை முறை மாற்றங்கள் என எவையெல்லாம் உதவும் என்று மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சில பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, உடலுறவின்போது வலி ஏற்படுவதுதான் உங்கள் ஆர்வம் குறையக் காரணம் என்றால், வழவழப்புக் கூட்டு பொருள்கள் அல்லது மாய்ஸ்டுரைஸர்களை மருத்துவர் உடனே பரிந்துரைப்பார்.
உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்வது இதயத்தை பலப்படுத்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், இதனால் பாலியல் செயல்திறனும் மேம்படும்.இது உடல் எடையைக் குறைக்கவும் உடல் தசைகளை இறுக்கமாக்கவும் உதவும்.

ஆரோக்கியமான உணவு: ஆரோக்கியமான உணவு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் சரிசெய்யக்கூடும்.

மனம்விட்டுப் பேசுதல்: பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் இது மிகவும் முக்கியமானதாகும்.உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள், உங்களுக்குள்ள குறைகள், பிரச்சனைகள் பற்றி இணையரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பெண்கள் இணையருடன் பாலியல் குறித்தும், விருப்பு வெறுப்புகள் குறித்தும் வெளிப்படையாகப் பேச முடிந்தால், அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடவும் அதிக ஆர்வம் காட்ட அதிக வாய்ப்புள்ளது. கட்டி அணைத்துக்கொள்வது, முத்தமிடுவது, தொடுவது போன்ற செய்கைகள் மூலம் பாசத்தை வெளிப்படுத்துவது உறவில் மீண்டும் நெருக்கத்தைக் கொண்டுவர உதவும்.

தொடங்குதல்: உங்கள் பாலியல் விருப்பத்தைக் குறைக்கும் சிக்கல்கள் எது என்று நீங்கள் கண்டறிந்ததும், அவற்றை எதிர்கொண்டு சமாளிக்கப் பழகுங்கள். அது உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

மொத்தத்தில், பாலியல் உணர்வுக்கு வயதாவதில்லை! வயது சம்பந்தப்பட்ட உடல் மாற்றங்கள் பல ஏற்பட்ட பிறகும் மகிழ்ச்சிகரமான பாலியல் உறவில் ஈடுபட முடியும். அதற்கேற்ப சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

Previous articleபெண்களை எந்த மாதிரியான சமயங்களில் உறவுக்கு அழைக்க வேண்டும் தெரியுமா?
Next articleஉடலுறவில் முழு சுகம் கிடைக்காமல் போவது ஏன் தெரியுமா..?