இரவில் கை பழக்கத்தில் இருந்து விடுபட ஆண் பெண்களுக்கு டிப்ஸ்கள்

626

சுய இன்பம் சரியா தவறா? : சுய இன்பம் என்பது ஒரு சாதாரண நடவடிக்கையே ஆகும். அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால் இளம் வயதில் அடிக்கடி தலைத்தூக்கும் காம உணர்வை கட்டுப்படுத்த தெரிந்து கொள்வது அவசியம்.

இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் வருவதை பார்க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு பயிற்சிகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவது கட்டாயமாகிறது.
சுய இன்பத்திலிருந்து விடுபட சில பயிற்சிகளை பார்ப்போம்

பயிற்சி ஒன்று:
Ø எப்போதும் உங்களை பிஸியாகவே உங்களை வைத்திருங்கள். இளம் வயதில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் அதற்கு சதா தீனி தேவைப்படுகிறது. நீங்கள் சரியான தீனி போடாவிட்டால் மனம் தன் விருப்பத்திற்கு ஏதாவது முருங்கை மரத்தில் ஏறி ஆடு ஆரம்பித்து விடும். அதனால் கதை, கவிதை, அறிவியல் ஆராய்ச்சி என்று அறிவுக்கு உணவு போட்டுக் கொண்டே இருந்தால் மனதில் வெறுமை தோன்றாது.

பயிற்சி இரண்டு:
Ø தனிமையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். செய்வதற்கு எதுவுமே இல்லாத போது, தனியாக இருப்பது கண்டதையும் பரீட்சித்து பார்க்க தூண்டி விடும். எனவே எப்போதும் பலர்சூழ இருக்க முயற்சி செய்யுங்கள்.

பயிற்சி மூன்று;
Ø விளையாட்டில் ஈடுபடுங்கள்-&அது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோன்களைச் செலவழிக்க ஒரு நல்ல வடிகாலாகவும் அமைகிறது.

பயிற்சி நான்கு:
Ø ஏதாவது சுவவாரசியமான பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த பொழுது போக்கில் ஈடுபடும் போது பிற தேவையில்லாத எண்ணங்களை மறந்து சுவாரஸ்யத்தில் மனம் லயிக்குமாறு செய்யுங்கள்.

பயிற்சி ஐந்து:
Ø பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் வீட்டு வேலைகளில் உடலை வருத்தி உழைத்தால் கூட சில தேவையில்லாத காம எண்ணங்கள் வருவதை அறவே தவிரிக்க இயலும்.

பயிற்சி ஆறு:
Ø காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பமா, வெறும் கற்பனையா, சைட் அடிப்பதா ஏதாவது ஒரு சமாதான நடவடிக்கை தானாக தலைதூக்கும். கொஞ்ச நேரத்தில் மனம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். உடனே அடுத்தடுத்த வேலையை பாக்க நகருங்கள். இன்னும் கொஞ்ச நேரம் என்று இதிலேயே மூழ்கி வேதாளத்தை உயர உயர முருங்கை மரத்தில் ஏற்றி விடாதீர்கள்.

சுய இன்பம் என்பது தவறல்ல, ஆனால் அதற்கு அடிமையாகி, மீளமுடியாமல் இருப்பதுதான் தவறு

உங்களுக்கு கீழ்கண்டவற்றில் ஏதேனும் சில அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை தயங்காது சந்தித்து ஆலோசனை பெறவும்.

முக்கியமாக கவனிக்க
பொதுவாக சுய இன்பத்தால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது என்று கூறினாலும் நிறைய இளைஞர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் அளவிற்கு அதிகமான சுய இன்பத்தில் ஈடுபட்டு
ü மனத்தளர்ச்சி மற்றும் உடல் சோர்வு, அசதி,
ü மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்து பேச தயக்கம்,
ü பெண்களிடம் பேசும்போதே அல்லது அவர்களை பார்க்கும் போதோ கண்கள் தன்னையும் அறியாமல் பெண்களின் மார்பகத்தை பார்ப்பது, இடுப்பை பார்ப்பது போன்ற செயல்கள். இதனால் அலுவலகத்திலோ பொது இடங்களிளோ கெட்டபெயர் ஏற்படுத்திக்கொள்வது.
ü ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுவது, இதனால் வெளியில் செல்ல தயக்கம்,
ü வேலையில் ஈடுபாடின்மை,
ü திருமணம் செய்ய தயக்கம்.
ü திருமணப்பேச்சை எடுத்தாலே பயம்.
ü உடலுறவில் ஈடுபட பயம்.
ü மனைவியோ கேர்ள் பிரண்டோ தப்பாக நினைப்பாள் என்ற பயம்.
ü அழகான பெண்களை பார்த்தவுடன் சுய இன்பம் செய்ய தோன்றுவது.
ü சுய இன்பம் செய்யாவிட்டால் தூக்கம் வராமல் இருப்பது
போன்ற அறிகுறிகள் இருந்தால் உடன் உளவியல் ஆலோசகர் & சிறப்பு மருத்துவரை அனுகி தயங்காமல் ஆலோசனை பெறவும்

எனவே அதிகப்படியான சுய இன்பத்தால்
Ø கை,கால் நடுக்கம்,
Ø அசதி,
Ø சோர்வு,
Ø மனத்தளர்ச்சி,
Ø விந்து முந்துதல்,
Ø ஆணுறுப்பு எழுச்சி குறைபாடு,
Ø உடலுறவில் நாட்டமின்மை,
Ø துனைவியை திருப்தி படுத்த முடியாமை,
Ø நினைவாற்றல் குறைபாடு,
Ø எதிலும் கவனமின்மை,
Ø படபடப்பு,
Ø மற்றவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமை,
Ø திருமணத்திற்கு தயக்கம்,
Ø உறுப்பு சிறுத்தல்,
Ø ஆணுறுப்பில் வலி

போன்ற உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தை தவிர்த்து, மேற்கண்ட பிரச்சினைகளால் பாதித்திருந்தால் தயங்காமல் உடனடியாக சிறப்பு மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெற்று பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்.

Previous articleகாம சூத்ரா உடலுறவு முறைகள் விளக்கம்!
Next articleவாய்வழியாக சுகம் காணுவது சரியா ?