ஆணும் பெண்ணும் பாலியல் பருவம் அடைய தாமதமடைய காரணம்?

528

aankalin antharanka kuraipaadu, aankalin vinthu utpathi, aankalukku viraippu piracchani, aanmai kurai erpada karanam, ankalin vinthu kaddi aaka, antharanga kelvi, antharangam

பாலியல் தகவல்:பொதுவாக, பெண்கள் 8-14 வயது காலகட்டத்திலும் ஆண்கள் 9-15 வயது காலகட்டத்திலும் பருவமடைவார்கள். பெரும்பாலான ஆண் பிள்ளைகள் 12 வயது வாக்கில் பருவமடைவார்கள். பருவமடைவதைக் குறிக்கும் ஆரம்ப கால அறிகுறி, விந்தகங்களின் அளவு பெரிதாவது. ஆண்குறி பெரிதாகும், ஆண்குறிப் பகுதியில் ரோமங்கள் வளரத் தொடங்கும். 14 வயதுவாக்கில் வளர்ச்சி திடீரென்று அதிகரிக்கும், அது அடுத்த 4-5 வருடங்கள் தொடரும்.

பருவமடைவதில் தாமதம் என்பதன் வரையறை (Definition of delayed puberty)

பருவமடையும் வயது என்பது, உலகளவில் மிகவும் வேறுபடுவதாக உள்ளதால், பருவமடைவதில் தாமதம் என்பதன் வரையறையானது, மொத்த ஆண்களில் 95% பேர் பருவமடையும் வயதின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றங்களின் காரணமாக, பருவமடையும் வயதானது உலகளவில் குறைந்துகொண்டே வருகிறது.

பெண்களுக்கு 13 வயது வரை, ஆண்களுக்கு 14 வயது வரை, பருவமடைவதன் அறிகுறிகள், மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் இருந்தால், அதனை பருவமடைவதில் தாமதம் என்று வரையறுக்கின்றனர்.

ஆண் பிள்ளைகள் பருவமடைவது தாமதமாகக் காரணங்கள் (What are the causes for delayed puberty in boys?)

பெரும்பாலும், ஆண்பிள்ளைகள் பருவமடைவது தாமதமாக, அவர்களின் உடல்வாகே காரணம். இதனை “இயல்பிலேயே உடல் வாகினால் பருவமடைவது தாமதித்தல்” என்கின்றனர். இவர்களுக்கு பருவமடைவது தாமதமாகும். அதாவது பருவமடைவது, அது தொடர்புடைய மாற்றங்கள் அனைத்தும் சற்று தாமதமாக நடக்கும். இந்தப் பிரச்சனை உள்ள ஆண் பிள்ளைகளுக்கு பிறக்கும்போதே ஆணுறுப்பு சிறியதாக இருக்கும். இது தவிர்த்து இவர்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் அல்லது நோய்கள் இருக்காது. இப்படிப்பட்ட ஆண் பிள்ளைகளில் 50-75% பேரின் பெற்றோருக்கு பருவமடைவது தாமதமாக நடந்துள்ளது. ஆகவே இது பரம்பரை பரம்பரையாக மரபணுக்களால் கடத்தப்படும் பண்பு என்று கருதப்படுகிறது.

மீதமுள்ளவர்களுக்கு, பருவமடைவது தாமதிக்க பின்வருபவற்றில் ஏதேனும் காரணமாக இருக்கலாம்:

ஹைப்போகோனடோட்ரோஃபிக் ஹைப்போகொனாடிசம்: மூளையில் (ஹைப்போதலாமஸ் அல்லது பிட்யூட்டரி சுரப்பியில்) உள்ள கோளாறு காரணமாக, பருவமடைவதைத் தூண்டும் ஹார்மோன்கள், ஃபாளிக்கில் தூண்டல் ஹார்மோன் (FSH) மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன் (LH) ஆகியவற்றின் உற்பத்தி குறைவதால் பருவமடைவது தாமதித்தல். இந்தப் பிரச்சனையுடன் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பு சிறிதாக இருக்கும். சிலருக்கு மணத்தை அறியும் திறன் குறைவாக இருப்பது போன்ற சில அறிகுறிகளும் இருக்கும். இந்த அறிகுறிகள் எல்லாவற்றையும் சேர்த்து, கால்மான் சின்ட்ரோம் என்று அழைக்கின்றனர்.

ஃபங்ஷனல் ஹைப்போகோனடோட்ரோஃபிக் ஹைப்போகொனாடிசம்: சிக்கில் செல் நோய், வீக்கமுண்டாக்குகிற குடல் நோய், நீரிழிவுநோய், நார்த்திசுக் கட்டிகள் போன்ற நாள்பட்ட நோய்கள் உள்ள ஆண் பிள்ளைகள் சிலருக்கு, பருவமடையும் செயலைத் தூண்டி நிகழ்த்தத் தேவையான நரம்பியல் அமைப்புகள் வளரத் தாமதமாவதால், பருவமடைதல் தாமதிக்கலாம்.

ஹைப்பர்கோனடோட்ரோஃபிக் ஹைப்போகொனாடிசம்: இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு விந்தகங்கள் செயல்படாமல் போவதால், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு குறைகிறது. இந்த ஆண் பிள்ளைகளுக்கு, உடல் பரிசோதனை செய்து பார்க்கும்போது அவர்களின் விந்தகங்கள் சிறியதாக இருப்பது தெரியவரலாம், அல்லது விந்தகங்கள் கீழிறங்காமல் வயிற்றுக் குழியில் பதிந்திருக்கலாம். பிற சிறுவர்களுக்கு ஏதேனும் நோய், காயமடைதல், அறுவை சிகிச்சை அல்லது (புற்றுநோய் சிகிச்சை போன்ற) சிகிச்சைகள் காரணமாக விந்தகங்கள் சேதமடைந்திருக்கலாம்.
ஆண் பிள்ளைகள் தாமதமாக பருவமடைவதற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் (What are the symptoms and signs of delayed puberty in boys?)

14 வயதாகியும் பருவமடைவதன் அறிகுறிகள் எதுவுமே தொடங்காமல் இருப்பது.

14 வயதாகியும் ஆன் குறியும் விந்தகங்களும் வளர்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பது. சில சமயம், விந்தகங்கள் வளரத் தொடங்கியிருந்தாலும் சிறிதாகவே இருக்கும், இது பருவமடைவதன் பிற அறிகுறிகள் அடுத்த 6-12 மாதங்களில் தொடங்கக்கூடும் என்பதன் அடையாளமாகும்.

உடல் வாகின் காரணமாக பருவமடைவது தாமதிக்கும் பிரச்சனை உள்ள சிறுவர்கள் பொதுவாக, ஒத்த வயதுள்ள பிற சிறுவர்களை விட உயரம் குறைவாக இருப்பார்கள். எனினும், வழக்கமாக 18 வயதுவாக்கில் இவர்களும் பிற ஆண்களைப் போன்றே அதே வளர்ச்சியை அடைந்துவிட்டிருப்பார்கள்.

பருவமடைதல் தாமதித்துள்ளது என்பதைக் கண்டறிதல் (How is the diagnosis of delayed puberty made?)

உடல் பரிசோதனை செய்து பார்க்கும்போது, பாலியல் தொடர்பான அம்சங்கள் வளராமல் இருப்பதன் அறிகுறிகள் மருத்துவருக்குப் புலப்படும். விந்தகம் இறங்காமல் இருப்பது போன்ற கோளாறுகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக, ஆண்குறியும் விந்தகங்களும் சோதனை செய்யப்படும்.
டெஸ்டோஸ்டிரோன், லூட்டினைசிங் ஹார்மோன் (LH) மற்றும் ஃபாளிக்கில் தூண்டும் ஹார்மோன் (FSH) போன்றவை சரியான அளவில் உள்ளதா எனப் பார்க்க இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படலாம்.
சில சமயம் எலும்பின் முதிர்ச்சியின் அளவைக் கண்டறிவதற்காக எக்ஸ்ரே எடுக்கப்படலாம்.
பிட்யூட்டரி சுரப்பியில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா எனக் கண்டறிய மூளையில் MRI ஸ்கேன் எடுக்கப்படலாம்.
ஆண்கள் பருவமடைதில் ஏற்படும் தாமதத்திற்கான சிகிச்சை (How is delayed puberty in boys treated?)

உடல் வாகின் காரணமாக தாமதித்திருந்தால், இன்னும் சில வருடங்களில் தானாகப் பருவமடைந்துவிடுவார் என்று கூறி மருத்துவர் பெற்றோருக்கு தைரியமளிப்பார். இதனால் ஆண் பிள்ளைக்கு கவலையோ மன இறுக்கமோ இருந்தால் மருத்துவ ஆலோசனை வழங்கப்படலாம்.

இதற்காகக் காத்திருக்க பொறுமையில்லாதவர்களுக்கு, குறுகிய காலம் டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். அது பருவமடையும் செயலைத் தூண்ட உதவும். டெஸ்டோஸ்டிரோன் ஊசி சிகிச்சையின் டோஸ், சிகிச்சை தேவைப்படும் காலம் ஆகியவை மருத்துவரால் தீர்மானிக்கப்படும். பொதுவாக தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ஊசி போடப்படும். இது பல மாதங்களுக்குத் தேவைப்படும். இது பருவமடையும்போது ஏற்படக்கூடிய மாற்றங்களைத் தொடங்கும், ஆண்குறி வளர்ச்சி, ஆணுறுப்புப் பகுதி ரோமங்களின் வளர்ச்சி மற்றும் பிற பாலியல் அம்சங்களை மேம்படுத்தும், பலருக்கு இவை சிகிச்சையை நிறுத்திய பிறகும் இயல்பாகத் தொடரும்.

மூளை அல்லது விந்தகங்களில் உள்ள பிரச்சனைகள் காரணமாக, தாமதமாகியுள்ளவர்களுக்கு, டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை ஒரு அணுகுமுறை, ஆனால் அவர்களுக்கு டோஸ் அதிகம் தேவைப்படும். அதுமட்டுமின்றி, சிகிச்சையை நீண்ட காலம் தொடர வேண்டியிருக்கும்

Previous articleதிருப்தியான சுகம் வேண்டுமா?
Next articleசாமானில் முரட்டு இடி வாங்கும் அழகிகள்!